திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கண்ணாடி கூண்டு அகற்றப்பட்டது

அடுத்த மாதம் 1-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடப்பதால் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கண்ணாடி கூண்டு அகற்றப்பட்டது. இதனால் ஆழித்தேர் முன்பு சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2023-03-01 18:45 GMT


அடுத்த மாதம் 1-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடப்பதால் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கண்ணாடி கூண்டு அகற்றப்பட்டது. இதனால் ஆழித்தேர் முன்பு சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தேரோட்டம் விழா பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடந்தது. கொடியேற்றம் வருகிற 9-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான

ஆழித்தேரோட்டம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது.

கண்ணாடி கூண்டு அகற்றம்

இந்த நிலையில் ஆழித்தேரோட்டத்துக்கான கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணி கடந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. .

தொடர்ந்து பணிகள் நடந்து வந்தநிலையில் கடந்த வாரம் இரும்பு தூண்களை கிரேன் உதவியுடன், பாதுகாப்பு முறைகளை பின்பற்றி கண்ணாடி கூண்டுகளை பணியாளர்கள் எடுத்தனர். தற்போது பல்வேறு பணிகள் முடிந்த நிலையில் ஆழித்தேர் பல மாதங்களுக்கு பிறகு கண்ணாடி கூண்டு அகற்றப்பட்டு காட்சி அளிக்கிறது.

போக்குவரத்து ஒழுங்கு பணி

கண்ணாடி கூண்டில் அடைப்பட்டு பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து இருந்த ஆழித்தேரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த பகுதி வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதி என்பதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடு்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆழித்தேரின் அருகில் நின்று மகிழ்ச்சியுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கிறாா்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தேரோட்டத்தின் போது ஆழித்தேரை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். அந்த சமயங்களில் தேரை அருகில் சென்று பார்க்க சற்று சிரமமாக இருக்கும். அடுத்த மாதம் தேரோட்டம் நடக்க உள்ளதால் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்ேபாது தேருக்கான கூண்டு அகற்றப்பட்டு இருப்பதால் தேரை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்