திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
தாளவாடி
கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு தக்காளி பெட்டிகள் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப்பாதை ஓரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.