அவினாசி அருகே தெக்கலூரில் அரிசி ஆலை நடத்தி வருபவர் சண்முகம். இவரது அரிசி ஆலையில் சிமெண்டு சீட்டை உடைத்து உள்ளே இறங்கிய மர்ம நபர்அங்கிருந்த பிரோவை கம்பியால் நெம்பி திறந்து அதிலிருந்து ரூ.1 லட்சத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தர்மபுரி பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் அரிசி ஆலையில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைதுசெய்தனர்.
-----------