அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-12-09 19:30 GMT

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வையார் விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை சான்று, சால்வை ஆகியவை வழங்கப்படும். இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 16-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தையும், 04328-296209 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்