வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
சமயபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு போனது.
சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடி ஒத்தனூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 34). இவர் கடந்த 14-ந்தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இந்த சம்பவம் குறித்து சந்துரு அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.