கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலத்தில் பிரசித்திப்பெற்ற இருதய கமலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் சோமஸ்கந்தர், அம்பாள் உள்ளிட்ட சாமிகள் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், ஊராட்சி தலைவர்கள் மணிகண்டன், ரேவதி அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.