நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு
மேட்டூர் அனல் மின் நிலைய நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் மேட்டூர் அனல்மின் நிலைய நீரேற்று நிலையத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கி நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.