மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு

மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-23 18:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் பகுதியில் செல்போன் கோபுரம் உள்ளது. அந்த கோபுரம் மீது ஒருவர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டு பொதுமக்கள் மத்தியில் மிரட்டல் விடுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை கீழே இறக்கினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபர் வெள்ளனூர் பகுதியை சேர்ந்த தங்கதுரை (வயது 40) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் தங்கதுரையை அவரது மனைவி திட்டியுள்ளார். இதனால் செல்போன் கோபுரத்தில் ஏறி தங்கதுரை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்