வீட்டில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

திருச்சுழி அருகே வீட்டில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-03 19:52 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி ெரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுந்தரராஜ் என்பவரின் வீட்டில் கீழ்த்தளத்தில் சுந்தர் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தினமும் இரவு நேரத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். வழக்கம்போல் இரவு நேரத்தில் அனைத்து விளக்குகளும் எரிய விட்டு சென்றுள்ளனர். காலையில் அதிக சத்தத்துடன் பல்பு வெடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். இதனால் திடீரென வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த தாகவும், பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் குழுவினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்