பெத்தாச்சிக்காடு-அரைக்கால்கரை இடையே தார்ச்சாலை வேண்டும்

வாய்மேடு அருகே பெத்தாச்சிக்காடு- அரைக்கால்கரை இடையே உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-26 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே பெத்தாச்சிக்காடு- அரைக்கால்கரை இடையே உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பெத்தாச்சிக்காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெத்தாச்சிக்காட்டில் இருந்து தகட்டூர் அரைக்கால்கரை பகுதிக்கு இணைப்பு சாலையாக உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த சாலை மண் சாலையாகவே உள்ளது.

இந்த பாதை வழியாகத்தான் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளுக்கு தாணிக்கோட்டகம் செல்வதற்கு இதே பாதையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

தார்ச்சாலை வேண்டும்

மழைக்காலங்களில் இப்பகுதி சாலை பள்ளமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பொது மக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சற்றும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுத்து பெத்தாச்சிக்காடு- அரைக்கால்கரையை இணைக்கும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்