மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

Update: 2023-06-15 18:50 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்த கூடாது. மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும். ஆகவே மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

காவிரி தண்ணீர் என்பது தமிழக மக்களின் உயிர் நீர், அவற்றை அளிப்பதில் எந்தவித விதி மீறலும் இருக்க கூடாது. தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்க கூடிய உரிமைகளை பெற்றுத்தர முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்