மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை; கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-18 20:05 GMT

நெல்லை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி. மற்றும் ஹெச்.பி. போன்ற மருத்துவ சேவைகள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல்

சித்த மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து அலுவலர்களும் தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் காய்ச்சிய நீரினை அனைவரும் பருக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜான் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்