அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-06 12:29 GMT

சேலம்,

எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை. அதிமுகவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு இனிமேல் அதிமுகவில் இடமில்லை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட 100% வாய்ப்பில்லை. அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள். அதிமுக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.


அதிமுக தமிழகத்தில் வலுவான எதிர்கட்சியாக உள்ளது.அதிமுக பொது செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். சுமார் 300 பேர் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். இலவச பயணம் குறித்து பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்து வருந்தத்தக்கது. திமுக அமைச்சர்கள் பலர் மக்களை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்