ஓடும் பஸ்சில்இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-30 18:45 GMT

திண்டிவனம், 

நாகர்கோவிலை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் நேற்று மதுரையில் இருந்து அரசு விரைவு பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டார். அவரது இருக்கைக்கு பின்புற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வந்தபோது, அந்த இளம்பெண் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை சக பயணிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் பஸ்சை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் நிறுத்துமாறு கூறினார். இதையடுத்து அந்த பஸ் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த இளம்பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமியிடம் நடந்த சம்பவம் பற்றி முறையிட்டார். அதன்பேரில் பஸ்சில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையின்போது அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு இளம்பெண் அதேபஸ்சில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்ததுடன், அவரை மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பஸ்சில் வாலிபர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் சக பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்