வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
வடுவூர்:
சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
தெப்பத்திருவிழா
மன்னார்குடி அருகே சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவில் அருகே உள்ள குளத்தில் எழுந்தருளினார்.
சிறப்பு அலங்காரம்
பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு ெதாடங்கி அதிகாலை வரை குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்ததது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.