இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருட்டு
மதுரையில் லேத் பட்டறையின் கதவை உடைத்து இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருட்டு நடந்தது.
மதுரை காமராஜர் சாலை மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). இவர் வடக்குவெளி வீதி வழக்காய்பேட்டை அண்ணா சிலை அருகே லேத் பட்டறை நடத்தி வருகிறார்.மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்த போது பட்டறையின் கதவு உடைக்கப்பட்டிருந்து.
மேலும் உள்ளே வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.