விருத்தாசலத்தில்2 வீடுகளில் செல்போன்கள், பணம் திருட்டுவாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை

விருத்தாசலத்தில் 2 வீடுகளில் புகுந்து செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-09 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் கஸ்பா தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மேல், மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். தொடர்ந்து, அங்கிருந்த 2 செல்போன், முருகனின் சட்டை பையில் இருந்த ரூ.13 ஆயிரத்தை எடுத்து சென்றுவிட்டார்.

இதேபோன்று, அதே பகுதியில் வசிக்கும் பிரபு என்பவரின் வீட்டுக்குள் சென்ற அந்த மர்மநபர் ஒரு செல்போன் மற்றும் அங்கிருந்த 13 ஆயிரம் ரூபாயையும் திருடி சென்றுவிட்டார்.

காண்காணிப்பு கேமரா காட்சி

காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டில் இருந்த செல்போன்கள் மற்றும் ரூபாய் திருடு போனதை கண்டு முருகன், பிரபு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, வார்டு கவுன்சிலர் தீபா மாரிமுத்துவை அழைத்து, தெருவில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர், அவர்களது வீட்டுக்குள் சென்றுவிட்டு, வெளியே வந்தது தெரியவந்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கிடையே விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு கடைக்கு, ஒருவர் செல்போன்களை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர், செல்போனை எடுத்து வந்தவர் முருகன், பிரபு வீட்டில் திருடியதாக கூறி வெளியான வீடியோவில் இருந்தவர் போன்று இருப்பதை பார்த்தார்.

வாலிபரை பிடித்து விசாரணை

உடன் இதுபற்றி கஸ்பா பகுதி வாலிபருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அவர்கள் அங்கு விரைந்து வந்து, சந்தேகப் படும்படியாக செல்போனுடன் வந்த வாலிபரை பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த மர்ம நபர் சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஜோஸ் ஆனந்த் (வயது 32) என்பது தெரியவந்தது. முருகன், பிரபு ஆகியோர் வீடுகளில் திருடியது அவர்தானா? அல்லது வேறு யாரேனும் திருடி வந்து கொடுத்த செல்போனை விற்பனை செய்வதற்காக ஜோஸ் ஆனந்த் எடுத்து வந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்