தொழிலாளியிடம் பணம், செல்போன் திருட்டு

Update: 2023-07-31 19:30 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி நயன்தாரா தியேட்டர் பக்கமாக நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு சிறுவன், இவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்றார். இது குறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் செல்போன் மற்றும் ரூ.500-ஐ திருடியது கிருஷ்ணகிரி ரெயில்வே காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்