பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகை, ரூ.21 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;
வீட்டின் பூட்டை உடைத்து...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள வேண்பாக்கம் சங்கர் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது 51). இவரது வீட்டில் கிருஷ்ணகுமார் மனையின் தம்பி விஜயசாரதி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடியில் உள்ள விஜயசாரதியின் மாமனார் வீட்டுக்கு கிருஷ்ணகுமார் மற்றும் விஜயசாரதி குடும்பத்துடன் சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நகை, பணம் திருட்டு
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.21 ஆயிரம் ரோக்கபணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணகுமார் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதைப்போல பொன்னேரி சங்கர் நகரில் வசிப்பவர் விஜயசாரதி (40) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி கொண்டு வெளியே சென்றார். இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 4 பவுன் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர்.