வீட்டில் பொருட்கள் திருட்டு

பேட்டையில் வீட்டில் பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2023-04-01 19:56 GMT

பேட்டை:

பேட்டை வீரபாகுநகரை சேர்ந்த ராஜசேகர் மனைவி மீனா (வயது 55). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு விருதுநகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த வெள்ளி விளக்கு, பித்தளை பிள்ளையார் சிலை உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த மீனா பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டித்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்