திருமண மண்டபத்தில் மளிகை பொருட்கள் திருட்டு-பூட்டை உடைத்து துணிகரம்
திருமண மண்டபத்தில் பூட்டை உடைத்து மளிகை பொருட்களை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருமண மண்டபத்தில் பூட்டை உடைத்து மளிகை பொருட்களை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) திருமணம் நடத்தும் மணவீட்டார் நேற்று முன்தினம் சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை மண்டபத்தில் வைத்து சென்றனர். இந்த நிலையில் திருமண மண்டபத்தின் பூட்டை உடைத்து மளிகை பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.