எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு
எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 30). இவர் மாயனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று ராமசாமி அந்த நிறுவனத்திற்கு மேற்பார்வைக்காக சென்றார். அப்போது, அந்த நிறுவனத்தின் கட்டுமான பணியின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் ஓயர் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.