திருப்புவனம்
மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் பிரகாஷ்(வயது 48). இவருடைய வயல் சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் உள்ளது. இந்தநிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் வயலில் உள்ள மோட்டார் அறையில் இருந்த 1300 அடி நீள காப்பர் கம்பிகளை திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு குறித்து கிருஷ்ணன் பிரகாஷ் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிந்து திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.