கட்டுமான பொருட்கள் திருட்டு
நெல்லையில் கட்டுமான பொருட்கள் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
நெல்லை பெருமாள்புரம் அருகே மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் ரெட்டியார்பட்டி செல்வி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அங்கு கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை மர்மநபர் திருடி சென்றதாக காளிமுத்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.