ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் திருட்டு
திருவோணம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் திருட்டுப்போனது.;
ஒரத்தநாடு:திருவோணம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்ட
திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடை கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கடைக்குள் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வீரையன் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.