விவசாயி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 12 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த மேல்நகர மேடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 55), விவசாயி. இவர், பொங்கலை முன்னிட்டு வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க முடிவு செய்தார்.
இதனையடு்தது கூலிக்கு ஆட்களை வைத்து வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்தார். இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த 12 பவுன் நகையை காணவில்லை. யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.