அரசு கலைக்கல்லூரியில் திருட்டு
திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் கம்பியூட்டர் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் மேல்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. சம்பவத்தன்று இந்த கல்லூரி கதவு பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்களை திருடிச்சென்றனர். இது குறித்து கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி ரோசணை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.