இரும்பு கடையில் திருட்டு

இரும்பு கடையில் திருட்டு

Update: 2022-08-27 20:39 GMT


மதுரை தெற்குவெளி வீதி பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து ராஜா (வயது 48). இவர் கீரைத்துறை பகுதியில் உள்ள இரும்பு கடையில் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.42 ஆயிரம் மதிப்பிலான கணினி உதிரி பாகங்களை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்