கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு

தட்டார்மடத்திலுல்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-09-15 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடத்தில் புனித தேவசகாயம்பிள்ளை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஓட்டைப்பிரித்து உள்ளே புகுந்து அங்கு சொரூபத்தில் போடப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் தலா 40 கிராம் எடை கொண்ட 13 வெள்ளி சங்கிலிகளை திருடிச்சென்றனர். இதுகுறித்து ஆலய நிர்வாகி தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்