சேந்தமங்கலம்
கொல்லிமலை ஒன்றியம் அரியூர் நாடு ஊராட்சியில் புகழ்பெற்ற மாசி பெரியண்ணன் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவில் அந்த பகுதி மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்குள்ள பூட்டை உடைத்து கருவறையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் அந்த கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அத்துடன் அங்கிருந்த எல்.இ.டி.டி.விக்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.