தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). அழகு நிலைய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். சில மணி நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.