அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை சாய்பாபா கோவில் அருகே ராஜேஷ் கண்ணன் என்பவர் (வயது 36) அலுவலகம் அமைத்து பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே நிறுத்தப்பட்டிருந்த சான்ட்ரோ கார், கடையில் இருந்த பேட்டரி, ரூ.10 ஆயிரம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ராஜேஷ் கண்ணன் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.