குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றபோதுவீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு
தர்மபுரி வெண்ணாம்பட்டி நந்தி நகரை சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 43). தர்மபுரியில் பீரோ கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்தோடு சினிமா பார்க்க சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.