தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு

Update: 2022-12-23 18:45 GMT

தர்மபுரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 31). தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வீட்டில் இரவு தூங்க சென்றபோது நகைகளை வீட்டுக்குள் உள்ள மேஜையில் கழற்றி வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் எழுந்து பார்த்தபோது அந்த 2 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தார்.

அப்போது அவர் நள்ளிரவில் எழுந்து வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கழிவறைக்கு கதவை திறந்து சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் மேஜையில் வைத்திருந்த நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கோபிநாத் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்