வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மதுரை பனையூர் அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் பரமேசுவரன் (வயது 34). சம்பவத்தன்று இவர், குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 3 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பரமேசுவரன் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.