கோட்டப்பட்டி அருகே விவசாயி மொபட்டில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு

கோட்டப்பட்டி அருகே விவசாயி மொபட்டில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-18 16:51 GMT

அரூர்:

கோட்டப்பட்டி அருகே விவசாயி மொபட்டில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 55). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளை மீட்க பணத்துடன் சென்றார். வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் அவர் மொபட்டில் பணத்தை வைத்து கொண்டு தீர்த்தமலைக்கு வந்தார். அங்குள்ள மளிகை முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார். பின்னர் மொபட்டை எடுக்க வந்தபோது பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருட்டு போனது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த பரந்தாமன் இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்