தீரன் சின்னமலை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தீரன் சின்னமலை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-08-03 19:02 GMT

கோப்புப்படம்

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும்தான் நினைவுக்கு வரும்.

தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

தீரன் சின்னமலையின் நினைவுநாளில், 'அநீதிகளை களைவதற்கு உறுதியேற்றுக் கொள்வோம்' என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்