கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-08-01 17:22 GMT

சிதம்பரம், 

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவில்  தெருவடைச்சான் உற்சவமும், தேரோட்டமும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், செடல் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீ மிதித்து நேர்த்திக்கடன்

பின்னர் மாலையில் பாலமான் கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் வளாகம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியது. தொடர்ந்து விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்