சிறுவன் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சிறுவனை கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் சுமார் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
தாழையூத்து:
சிறுவனை கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் சுமார் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் கொலை
நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் கடந்த 2019 -ம் ஆண்டு ஒரு சிறுவன் முட்புதருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், அந்த சிறுவனை அழைத்து சென்று சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டு, அவனை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக குறிச்சிகுளத்தை சேர்ந்த மாயாண்டி (வயது 21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
பின்னர் மாயாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு கடந்த 1½ ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
வாலிபர் கைது
இதையடுத்து மாயாண்டிக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தாழையூத்து போலீசார் மாயாண்டியை தேடி வந்தனர். இந்த நிலையில் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் நேற்று மாயாண்டியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.