சொந்த செலவில் சாலை அமைத்த இளைஞர்கள்

சத்துவாச்சாரியில் இளைஞர்கள் சொந்த செலவில் சாலை அமைத்தனர்.

Update: 2023-04-03 17:53 GMT

வேலூர் மாநகராட்சி 18-வது வார்டு சத்துவாச்சாரியில் தஸ்தகிரி தெரு உள்ளது. இந்த தெருவுக்கு சாலை அமைக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வைத்தனர். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது தெருவில் சாலை அமைக்க திட்டமிட்டனர். அதற்கான செலவையும் அவர்களே ஏற்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ரூ.1 லட்சம் வரை சொந்த செலவில் பணம் சேர்த்தனர். அந்த பணத்தில் அந்த தெருவில் நேற்று இரவு சிமெண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது தெருவுக்கு தேவையானதை நாங்கள் செய்து வருகிறோம். தற்போது சாலை அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்தபின்னர் வேகத்தடையும் அமைக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்