இளம் பெண் திடீர் மாயம்

திருக்கோவிலூரில் இளம் பெண் திடீர் மாயம் போலீசார் விசாரணை

Update: 2023-02-18 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் ருத்திரப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி ஆலியா(வயது 19). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 1½ வருடங்கள் ஆகிறது.

இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த ஆலியா நள்ளிரவில் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல்லா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஆலியாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்