இளம்பெண் மர்மச்சாவு
வாணியம்பாடி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.;
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
வாணியம்பாடியை அடுத்த தாசிரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மோனிஷா (வயது 23). நேற்று பிற்பகல் அவர்களது வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். மாலை 4 மணி வரையில் மோனிஷா எழாமலேயே இருந்ததால் அவரை அவரது தம்பி கார்த்திக் எழுப்பி உள்ளார்.ஆனால் எழவில்லை. பின்னர் அந்த பகுதியில் இருந்தவர்கள் மோனிஷாவை நாட்டறம்பள்ளிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோனிஷாவின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.