காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் போலீசில் புகார்

ஜெயங்கொண்டம் அருகே காதலித்துவிட்டு ஏமாற்றியதாக இளம்பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-30 17:29 GMT

ஆசை வார்த்தைகள் கூறி...

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் ராஜவேல்(வயது 31). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் பாண்டியன் மகள் நதியா(21) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக ராஜவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வது பற்றி வீட்டில் பேசியபோது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கைது

இந்நிலையில் ராஜவேல் குடும்பத்தினர் நதியாவை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நதியா இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை சில ஆண்டுகளாக ஏமாற்றி காதலித்து விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து ராஜவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்