ஓரமாக போக சொன்னதால் ஆத்திரம்: மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்

ஓரமாக போக சொன்னதால் ஆத்திரத்தில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-16 03:57 GMT

சென்னை பாரிமுனையில் இருந்து கண்ணகி நகருக்கு நேற்று முன்தினம் இரவு மாநகர பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் கண்ணபிரான் ஓட்டி வந்தார். கண்ணகி நகர் பஸ் நிலையத்துக்குள் வந்த போது அங்கு வழிவிடாமல் நின்றிருந்த வாலிபரிடம், ஓரமாக போகும்படி டிரைவர் கண்ணபிரான் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், "எங்கள் ஏரியாவில் எங்களை ஓரமாக போக சொல்வதா?" என்று கூறி பஸ் கண்ணாடி மீது கல்லை எடுத்து வீசினார். இதில் மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் டிரைவரை மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த கண்ணகி நகரை சேர்ந்த பிரவீன் (வயது25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்