செண்டு பூக்கள் விளைச்சல் அமோகம்

கூடலூர் பகுதியில் செண்டு பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-06-26 19:30 GMT

விளைச்சல் அமோகம்

கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவரப் பகுதிகளில் உள்ள தோட்ட விவசாயிகள் கடந்த மாதம் பென்சால் என்ற புதிய ரக செண்டு பூக்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது கூடலூர் பகுதியில் செண்டு பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

இந்த செண்டு பூக்களை கம்பம், சீலையம்பட்டி, மதுரை பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.70 வரை விற்பனையானது. இந்நிலையில் நேற்று செண்டு பூ ஒரு கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.30 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகம் காணப்பட்டாலும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தேவை குறைவு

இது குறித்து விவசாயி முகேஷ் என்பவரிடம் கேட்டபோது, விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வரும் காலங்களில் செண்டு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இதனால் விலை அதிகரித்து காணப்படும். தற்போது முகூர்த்த நாட்கள், கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படாததால் செண்டு பூக்களின் தேவை குறைந்து உள்ளது. வரத்து அதிகமாக இருந்தும் விலை குறைந்து உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்