வீட்டுக்கு பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து சாவு

வீட்டுக்கு பெயிண்ட் அடித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Update: 2023-07-29 18:45 GMT


மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு பகுதி சேர்ந்தவர் சின்னதுரை (வயது 52). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. சம்பத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது உயரமான இடத்தில் நின்று பெயிண்ட் அடித்த அவர், தவறி கீழே விழுந்தார். இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்