மரம் வேரோடு சாய்ந்து தொழிலாளி பலி

பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோட்டில் மரம் வேரோடு சாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-13 17:32 IST

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54), கூலி தொழிலாளி. இவர் இன்று காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை செல்லும் சாலையில் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்