இரணியல் அருகே தொழிலாளி தீயில் கருகி சாவு

இரணியல் அருகே தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-08 21:26 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகக்கண் (வயது 75). தொழிலாளி. இவர் நேற்று மதியம் வீட்டு தோட்டத்தில் காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்தார். அப்போது, எரிந்த தீ எதிர்பாராதவிதமாக ஆறுமுகக்கண் மீது பட்டு உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்