தொழிலாளி மர்மச்சாவு

செம்பனார்கோவில் அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.;

Update:2023-08-28 00:15 IST

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் அருகே மேலபெரும்பள்ளம் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று காலை கருவிழந்தநாதபுரம் மெயின் ரோட்டின் அருகே உள்ள திடலில் இளங்கோவன் உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்