மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

தக்கலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

Update: 2023-05-04 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

தக்கலை அருகே உள்ள சங்கரன்காவு பகுதியை சோ்ந்தவர் ராஜா (வயது 53), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை. ராஜாவுக்கு வலிப்புநோய் உண்டு. இதனால் தன்னை கவனிக்கு ஆள்இல்லையே என்ற மன வருத்தத்தில் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்தபோது வலிப்புநோய் வந்து வீட்டின் அருகில் நடைபாதையில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாவின் தம்பி அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்